“ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் வசித்து வரும் ஹட்ஸா (Hadza) பழங்குடியினர், கற்காலம் தொட்டு இன்று வரை எவ்வித மாற்றமுமின்றி தங்களின் பாரம்பரிய வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
வட மத்திய தான்சானியாவின் ஏயாசி ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் இவர்களின் மக்கள்தொகை தற்போது 1,200 முதல் 1,300 என்ற அளவில் மட்டுமே எஞ்சியுள்ளது. குகைகளிலும் பீடபூமிகளிலும் பறவைக் கூடுகளைப் போன்ற வடிவத்தில் வீடுகளைக் அமைத்துக்கொள்ளும் இந்தச் சமூகத்தில், எந்தவொரு தலைவரோ அல்லது அதிகார அமைப்போ இருப்பதில்லை.
குறிப்பாக, இவர்களிடம் முறையான திருமண முறைகளோ அல்லது சடங்குகளோ கிடையாது; மாறாக, நெருப்புக் குண்டத்தைச் சுற்றி ஒன்றுகூடும் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் தங்களுக்குள் இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இங்கு எந்தவொரு பாரம்பரிய விதிகளாலும் கட்டுப்படாமல், பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீண்ட காலம் இணைந்து வாழும் தம்பதியினரை இந்தச் சமூகம் கணவன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறது.
