“நடுரோட்டுல எல்லாரும் பார்க்குறப்பவே என்னைப் பார்த்து ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்லி இப்படியா சார் சரமாரியா திட்டுவீங்க?” என்று தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சக போக்குவரத்து போலீஸ் அதிகாரி திட்டியதால் நடுரோட்டிலேயே விம்மி விம்மி கண்ணீர் விட்டு அழுத நெஞ்சைப் உருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியில் எந்நேரமும் வாகன நெரிசல் மிகுந்த ஜி.எஸ்.டி சாலையில் அந்தப் பெண் காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், அவர் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே மிகக் கொடூரமாக திட்டியுள்ளார்;
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் காவலர், சாலையில் நின்றுகொண்டே தேம்பித் தேம்பி அழுத காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், பெண் காவலர்களுக்கே இந்தத் துறையில் பாதுகாப்பு மற்றும் மரியாதை இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன என்று நெட்டிசன்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தை நோக்கிக் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தாம்பரம், ஜி.எஸ்.டி சாலையில் பணியில் இருந்த பெண் காவலரை போக்குவரத்து போலீசார் சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி சரமாரியாக திட்டியதில் பெண் காவலர் கண்ணீர் விட்டு அழும் காட்சி#Tambaram | #TrafficPolice | #WomanPolice | #PolimerNews pic.twitter.com/zWZurhwauJ
— Polimer News (@polimernews) June 18, 2026
“>
