தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றி கழகம் என நான்கு மணி போட்டிகள் நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியலில் ரீதியாக பிற கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் 2026 தேர்தலுக்கு வேட்பாளர்களின் நியமிப்பது மற்றும் ஜெய்ப்பதற்கான புதிய வியூகங்களை வகுப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் என்னதான் எதிரியாக இருந்தாலும் நேரில் சந்தித்தவுடன் அவர்கள் நட்பு பாராட்டியவிதம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதாவது கொள்கை ரீதியாக வேறுபட்ட துருவங்களாகச் செயல்படும் அரசியல் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக எம்.பி. திருச்சி சிவா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் எதார்த்தமாகச் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட ‘செல்பி’ புகைப்படம், அரசியலில் நாகரிகமான உறவு நிலவுவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் தேர்தல் கூட்டணிகள் குறித்த பரபரப்பான விவாதங்கள் ஒருபுறம் நடந்தாலும், வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட தலைவர்கள் ஒரே இடத்தில் சுமூகமாகச் சந்தித்துக் கொண்டது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.