தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 20 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். வரவிருக்கும் தேர்தலுக்கான களப்பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களுக்கான கட்டண விவரங்களையும் திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ. 25,000-மும், மகளிர் மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ. 15,000-மும் கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.