சமூக வலைதளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் பெறுவதற்காக, சிலர் தங்கள் உயிரைப் பந்தயம் வைத்து ஆபத்தான ஸ்டன்ட்களைச் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வேகமாகச் செல்லும் ரயிலின் கதவில் தொங்கியபடி ஒரு நபர் செய்யும் ஆபத்தான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரயிலின் கதவு கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு வெளியே தொங்கியபடி அவர் செய்யும் செயல்கள் பார்ப்பவர்களின் நெஞ்சை அதிர வைக்கின்றன. இந்த வீடியோவை எடுப்பவர், அவரைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரைப் பணையம் வைத்து இப்படிச் செய்வது “ஸ்வாக்” என்று சிலர் தவறாக நினைத்துக்கொள்கின்றனர்.
இந்த வீடியோவை @dkjain1308 என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட நிலையில், பல லட்சம் பேர் இதைப் பார்த்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். “பசி என்பது வாயில் மட்டுமல்ல, சிலரின் மூளையிலும் இருக்கிறது” என்று சமூக வலைதளப் பயனர்கள் விமர்சித்துள்ளனர்.
हे राम..
इन जैसों से सृष्टि की रक्षा करो….
प्रभु 🙏
🤯 pic.twitter.com/0Gt6MnwKpe— Dinesh (@dkjain1308) June 16, 2026
“>
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வாழ்நாள் முழுவதும் ரயிலில் பயணிக்கத் தடை செய்ய வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய விபரீத ஸ்டன்ட்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணராமல், புகழுக்காகச் சிலர் செய்யும் இத்தகைய அலட்சியம் பெரும் கண்டனத்திற்குரியது.
