தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக வெற்றிக்கழகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் காமராஜர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட செயலாளர் வினோத் ரவி அவர்களின் தலைமையில் இன்று காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருப்பதாக தற்போது தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் மாவட்டம், ஒன்றியம், பேரூர் பகுதி வார்டு, கிளை மற்றும் அதன் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனித சங்கிலி போராட்டம் இன்று கும்பகோணத்தில் உள்ள காமராஜர் சாலை SET மகாலில் நடைபெற இருக்கிறது.
Let’s gather Together to show our opposition against TASMAC. @TVKVijayHQ @BussyAnand@vinothravi11#தமிழகவெற்றிக்கழகம் #thalaivarvijay pic.twitter.com/KztLnPizLZ
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) February 15, 2025
