தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மீண்டும் அதிமுகவிற்கே திரும்பியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் முன்னிலையில் இவர்கள் தங்களை மீண்டும் தாய்க் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
வாக்குப் பதிவிற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இந்த அதிரடித் திருப்பம் செங்கோட்டையன் தரப்பிற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. தவெக-வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மீண்டும் அதிமுகவிற்கு வந்திருப்பதாகக் கூறியுள்ள இவர்களுக்கு, மீதமுள்ள நாட்களில் தீவிரமாக வாக்கு சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
