சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, சமோசா பிரியர்களின் நெஞ்சை உடைக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வினோதமான உணவு சோதனைகள் இணையத்தில் Trend ஆகி வருகின்றன.
மேலும் அந்த வகையில், பொதுவாக சமோசாக்கள் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கப்படும். ஆனால், இந்த வைரல் வீடியோவில் ஒரு நபர் சமோசாவை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக, அதன் மீது பெயிண்ட் அடிப்பது போன்ற ஒரு வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செயலைச் செய்கிறார். இந்த வீடியோவை சமையல் கலைஞர் சரன்ஷ் கொய்லா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
समोसो पर कलर किया जा रहा है मुझे लगता था कि समोसा तो शुद्ध होता है लेकिन यहां भी मिलावट है। pic.twitter.com/er9srPd4dQ
— Pushpraj sharma (@ThePushprajX) June 20, 2026
“>
இந்நிலையில் சமோசாவின் மீது தூரிகை மூலம் பெயிண்ட் அடிக்கப்படும் இந்த காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இது சமோசா பிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்றும், “உணவுப் பொருட்களுடன் இப்படி விளையாடக் கூடாது” என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வினோதமான சமையல் முறை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
