சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மஸ்தூரி பகுதியில் உள்ள கர்ரா கிராமத்தில் சனிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த தம்பதியினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வீட்டில் துணிகளை காயவைப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பெண் துணிகளைக் காயவைக்கச் சென்றபோது மின்சார கம்பியைத் தொட்டதால் தூக்கி வீசப்பட்டு, துடிதுடித்துள்ளார்.
இதனால் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர், தன் மனைவியைக் காப்பாற்ற உடனடியாக ஓடிச் சென்றுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் மின்சாரத்தின் பிடியில் சிக்கினார். இதனால், மரணத்திலும் பிரியாத அந்தத் தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து, இந்த உலகை விட்டு ஒன்றாக விடைபெற்றனர்.
