டெல்லியில் காரில் அமர்ந்து உணவருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய தட்டுகளை நடுரோட்டிலேயே வீசிச் சென்ற ஒரு குடும்பத்தினரின் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை அங்கிருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை நேரில் தட்டிக்கேட்டுள்ளார். “நம்மிடம் பொது ஒழுக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது” என்று வருத்தத்துடன் பதிவிடப்பட்ட அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
A family was sitting in a car, eating snacks and throwing their trash onto the road in Delhi.
When a man saw this, he confronted them and said, Don’t throw your trash on the road. Pick it up
They argued with him and replied, “Tere baap ka road hai?” 😳 pic.twitter.com/SADccjrreA
— Lakshay Mehta (@lakshaymehta08) June 20, 2026
“>
மேலும் பணமும் சொகுசு காரும் இருந்தாலும், பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கம் அந்தக் குடும்பத்திற்கு இல்லை என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தவறு செய்தவர்களை தைரியமாகத் தட்டிக்கேட்டு உள்ளார்.
இந்நிலையில் அந்த நபருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், பொது இடங்களில் இதுபோன்று குப்பை கொட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் குறையும் என்றும் இணையவாசிகள் டெல்லி அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
