தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது மொபைல் எண்ணை தேர்வு செய்வதில் புதிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ வாடிக்கையாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மொபைல் எண்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஃப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என்றுஇரண்டு வகைகளுமே வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி மொபைல் நம்பரை தேர்வு செய்யும் புதிய சாய்ஸ் நம்பர்ஸ் ஸ்கீம் என்ற தலைப்பை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்களது மொபைல் எண்ணின் கடைசி நான்கிலிருந்து ஆறு இலக்கங்கள் வரை உங்களின் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ள முடியும்.

இதற்கு முதலில் ஜியோவின் அதிகாரபூர்வ இணையத்தளமான com என்ற இணையதள பக்கத்திற்கு சென்று self care என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மை ஜியோ ஆப் வைத்திருந்தால் அதன் மூலமாக self care ஆப்ஷனை தேர்வு செய்ய முடியும். அதன் பிறகு சாய்ஸ் நம்பர் செக்சன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கடைசி நான்கில் இருந்து ஆறு இலக்க எண்களை நீங்கள் எடுத்து செய்ய வேண்டும். நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடிய அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த எண்களை தேர்வு செய்யலாம். உங்களுக்கு பிடித்த எண்களை தேர்வு செய்த பிறகு கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குச் சென்று 499 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்தி 24 மணி நேரத்திற்குள் உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்த புதிய ஜியோ எண் ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.