உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி youtube போல வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்டுகளை பெற முடியும். நேரடியாக நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பலாம். இருந்தாலும் இந்த வசதி வாட்ஸ் அப் சேனல் அம்சம் தற்போது கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவிகள் ஆகும். இங்கு அட்மின்கள் படங்கள், காணொளிகள் மற்றும் வாக்கெடுப்புகளை நடத்த முடியும். மேலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை லிங்க் அல்லது அந்த குறிப்பிட்ட சேனலை வாட்ஸ் அப்பில் தேடி சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களை பெறலாம்.

இதற்காக வாட்ஸ் அப்பில் அப்டேட் சென்ற புதிய மெனு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் குரூப் வசதி போல சேனல் அட்மின் அனுமதி வழங்கிய பிறகு சேனலில் இணைய முடியும். தனியுரிமை பாதுகாக்கும் விதமாக பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் சுயவிவர புகைப்படம் எதுவும் காண்பிக்கப்படாது. whatsapp சேனலில் பதிவிடப்படும் தகவல்கள் உட்பட அனைத்தும் 30 நாட்கள் மட்டுமே காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.