திருப்பூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் த.வெ.க அசுர வேகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள சம்பவம், மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொத்தமாக அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக அமைச்சர் K.A. செங்கோட்டையன் (KAS) முன்னிலையில் த.வெ.க-வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளர் நாகராஜ் தலைமையில், கவுன்சிலர்கள் குமார், சாந்திமணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து த.வெ.க-வில் ஐக்கியமாகியுள்ளனர்.
கட்சியில் இணைந்த பிறகு பேசிய மதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகராஜ், இன்றைய இளைஞர் சமுதாயம் ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் விஜய்யின் பக்கமே நிற்கிறது என்றும், அதனால் தான் தாங்களும் இந்த அதிரடி முடிவை எடுத்ததாக ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாகவே தமிழகத்தில் DMK, ADMK, PMK, DMDK போன்ற முன்னணி கட்சிகளில் இருந்த முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் தொடர்ந்து த.வெ.க-வை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், தற்போது திருப்பூரில் மதிமுக கூண்டோடு கலைந்து த.வெ.க-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது!
