கூட்டணி முறிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மேடையில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசி காங்கிரஸை துவம்சம் செய்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நமது முதுகில் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்குப் பதவி ஆசைக்காக நமது முதுகிலேயே குத்திவிட்டு ஓடிப்போய்விட்டது என்று அவர் கொதித்துள்ளார்.

இந்தியாவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியோ அல்லது அமித் ஷாவோ காரணம் கிடையாது என்றும், அதற்கு முழு முதற் காரணமே இந்த காங்கிரஸ் கட்சிதான் என்றும் அவர் அனல் பறக்கப் பேசியுள்ளார். ​மதச்சார்பின்மையைப் பாதுகாக்க நமது திமுக தொண்டர்கள் தங்களின் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி, களத்திலேயே இல்லாத காங்கிரஸ் வேட்பாளர்களை இந்தத் தேர்தலிலும் 5 இடங்களில் ஜெயிக்க வைத்தார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், குறைந்தபட்ச நன்றியோ அல்லது அரசியல் நாகரிகமோ இல்லாமல் அவர்கள் புதிய த.வெ.க அரசில் இணைந்துவிட்டதால், காங்கிரஸை எந்தக் காலத்திலும் இனி திமுகவில் சேர்க்கக் கூடாது என்று சாடியுள்ளார். தங்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மிக விரைவில் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார்