கோவை சேர்ந்த பிரபல டாக்டருக்கு 50 வயது ஆகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள். டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம்.

வெளியில் எங்கும் செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். அந்த டாக்டர் எந்தவித குற்றம் செயலிலும் ஈடுபடவில்லை. இருப்பினும் மர்ம நபர் மிரட்டியதால் என்ன செய்வது என்று அறியாமல் தனது வங்கி கணக்கு விவரங்களை கூறியுள்ளார். பின்னர் பணத்தை ட்ரான்ஸ்பர் செய்யவில்லை என்றால் நேரில் வந்து நடவடிக்கை எடுப்போம் என மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

இதனால் டாக்டர் தனது வங்கி கணக்கில் இருந்த 2.9 கோடி ரூபாய் பணத்தை குற்றவாளிகள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக நினைத்து அந்த டாக்டரும் அறையை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தார்.

பின்னர் தானே ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.