செங்கல்பட்டு மாவட்டம் அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் இவரது மகன் சுபாஷ் (27). நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சுபாஷ் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பெரியப்பா அண்ணாமலையின் மகனான சுரேந்தர் என்பவர் அவசர வேலை இருக்கிறது. உன்னுடைய இருசக்கர வாகனத்தில் என்னை அழைத்துச் செல் என கூறியுள்ளார்.
இதனால் சுபாஷ் தனது இருசக்கர வாகனத்தில் சுரேந்தரை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது திடீரென சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்ட இங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது கொலை செய்யப்பட்ட சுபாஷ் சுரேந்தர் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் மின்வாரியத்தில் இருவரும் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தனர். அன்று இரவு சுரேந்தர் தனது தம்பியை அழைத்து சென்று கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
