எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் அதிக அளவில் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் உள்ள 90.6 சதவீதம் குழந்தைகள் ஆங்கில வழி கல்வியை பயில்கின்றனர். கேரளாவில் 80.9 சதவீதம் குழந்தைகளும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 79.8% குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி பயின்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்சாப், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.