நாட்டின் பிரபலமான திரை பிரபலங்கள் தங்களது ஆண்டு வருமானத்துக்கேற்ப வருமான வரியை ஒழுங்காக செலுத்தி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும். குறிப்பாக, திரைப்படங்களில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள், கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2024-2025) அதிக வருமான வரி செலுத்திய திரைப்பட பிரபலங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த நிதியாண்டில் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தி உள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது முதல் பத்தாவது இடம் வரை வரிசையில் இடம் பிடித்துள்ளவர்கள்:

சல்மான் கான் – ரூ.75 கோடி

அமிதாப் பச்சன் – ரூ.71 கோடி

அஜய் தேவ்கன் – ரூ.42 கோடி

ஹிருத்திக் ரோஷன் – ரூ.42 கோடி

ரன்பீர் கபூர் – ரூ.36 கோடி

கபில் ஷர்மா – ரூ.26 கோடி

கரீனா கபூர் – ரூ.20 கோடி

ஷாஹித் கபூர் – ரூ.14 கோடி

மேலும்  நடிகர் விஜய் ஒவ்வொரு வருடமும் வருமான வரி அதிகம் செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.