தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் அந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது உடல் வீட்டில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் தகனம் செய்யப்பட இருக்கிறது. நேற்று இரவு முதலே திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாடலாசிரியர் சினேகன் ஒரு உருக்கமான தகவலை சொன்னார். அதாவது அவரது மகள் இந்துஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர்களது குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் பேரனுக்கு ரோபோ சங்கர் காதுகுத்து விழாவினை மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்த நிலையில் அதற்குள் மரணம் அடைந்து விட்டார் என்று கூறினார். மேலும் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான விழா நடைபெற இருந்த நிலையில் ரோபோ சங்கர் உடல் நல குறைவினால் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.