தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் அந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் தகனம் செய்யப்பட இருக்கிறது. நேற்று இரவு முதலே திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரோபோ சங்கர் உடலுக்கு
பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சண்டை பயிற்சியாளர் #RoboShankar #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/QY9kkt0i8T— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 19, 2025
அந்த வகையில் அவரது நெருங்கிய நண்பரும் சண்டை பயிற்சியாளருமான ராமு ரோபோ சங்கர் உடலுக்கு 500 ரூபாய் நோட்டுகளான பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரிடம் எதற்காக பணமாலை அணிவித்தீர்கள் என்று கேட்டபோது, ரோபோ சங்கர் எப்போதுமே பணம் முக்கியமில்லை என்று கூறி அனைவருக்கும் பணத்தை கொடுத்து உதவி செய்வார். அப்படிப்பட்ட ஒருவருக்கு மரியாதை செலுத்தவே இந்த பணமாலை என்று உருக்கமாக கூறினார். மேலும் அவரிடம் பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
