குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஏசியின் வெளிப்பகுதி தரையிலோ அல்லது தோட்டத்திலோ இருக்கும்போது, அதன் வழியே பாம்புகள் எளிதாக ஏசி பைப்Line-க்குள் நுழைந்துவிடுகின்றன.

மேலும், மழைக் காலங்களில் தங்களுக்குத் தேவையான கதகதப்பான சூழலைத் தேடி ஏசி கம்ப்ரஸர் பகுதிக்கு பாம்புகள் வர வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்கச் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏசி பைப் செல்வதற்காகச் சுவர்களில் போடப்படும் துளைகளில் ஏதேனும் இடைவெளி இருந்தால், அதை சிமெண்ட் அல்லது பசையைக் கொண்டு நன்றாக அடைக்க வேண்டும்.

விண்டோ ஏசி பயன்படுத்துபவர்கள் அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் இடைவெளி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

“>

 

வீட்டைச் சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதுடன், மரக்கிளைகள் வீட்டின் ஜன்னல் அல்லது ஏசிப் பகுதியைத் தொடாதவாறு வெட்டிப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பாம்புகள் ஏசிக்குள் நுழைவதைத் தடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம்.