லாட்டரி மார்டினிடம் இருந்து பாவ பணத்தை திமுக நன்கொடையாக வாங்கி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து இருக்கும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, வெளிப்படை தன்மையுடன் எங்களது நன்கொடை விவரங்களை வெளியிட்டு இருக்கிறோம். மிரட்டி தேர்தல் பத்திரங்களை பெற்ற பாஜக பற்றி அறிக்கை விட எடப்பாடி பழனிச்சாமிக்கு முதுகெலும்பு இல்லையா என விமர்சித்துள்ளார்.