தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவேசமாகவும் எழுச்சியாகவும் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தின் போது விவசாயிகளின் குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அதே நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர் மத்திய மற்றும் மாநில அரசின் பொறுப்புகளில் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அப்போதுதான் அரசால் அந்த செலவை ஏற்க முடியும் எனவும் விஜய் தெளிவாக கூறினார்.
அதன் பிறகு பல்வேறு புதிய அறிவிப்புகளை விவசாயிகளுக்காக விஜய் வெளியிட்ட நிலையில் அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசை என்றார். தொடர்ந்து பேசிய விஜய் ஒரு மனிதன் மருத்துவரையும் பொறியாளரையும் அரிதாக சந்திப்பான். ஆனால் தினமும் மூன்று வேலையும் விவசாயிகளை சந்திக்கிறான் என்றார்.
மேலும் இந்த கருத்தை முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாகவும் இந்த கருத்தைதான் விஜய் காப்பியடித்து பேசியிருப்பதாகவும் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
