ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் பாஜக பந்தாடியிருக்கிறது என நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா காலத்து அதிமுக வேறு, சந்தர்ப்பவாதி இபிஎஸ் காலத்து அதிமுக வேறு. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பாடம் புகட்டுவோம். அது நடக்காவிட்டால் நான் நிச்சயம் அரசியலிலே இருக்க மாட்டேன் என்று கருணா சபதம் போட்டுள்ளார்.