செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், ஒரு கொடியை ஏற்றுவதற்கு அந்த இடம் ஏற்புடையது அல்ல. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இஸ்லாமியர்களில்  ஒரு சிலர். அடிப்படைவாதம்…  பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடியவர்கள் திட்டமிட்டு அந்த நிகழ்வை ஏற்படுத்துகிறார்கள் என்றால் ?  அதற்கு காவல்துறையை உடனடியாக ரெஸ்பான்ஸ் பண்ணி,  அந்த கொடிக்கம்பத்தை அகற்றுகிறது என்றால் ? அதே தெருவில் விசிகவுடைய கொடி  இருக்கிறது.

அது காவல்துறை கண்ணுக்கு ஏன் தெரியல ? அதே தெருவில் திமுக உடைய கொடி இருக்கிறது. அது ஏன் காவல்துறை கண்ணுக்கு தெரியல ? அல்லது காவல்துறை முடிவெடுக்கிறதா.. திமுக கொடி இருந்தால் அது இஸ்லாமியர்கள் அங்கீகரித்துக் கொள்கிறார்கள். விசிக கொடி இருந்தால் இஸ்லாமியர்கள் அங்கீகரித்துக் கொள்கிறார்கள். அது ரோட்டில் இருந்தாலும் பரவாயில்லை….

சாலையில் இருந்தாலும் பரவாயில்லை….  அது பர்மிஷன் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை….  அதையெல்லாம் இஸ்லாமியர்ளின் அடிப்படை வாத அமைப்புகளோ, அல்ல 10 , 50  இஸ்லாமியர்களும் ஒத்து கொண்டால் அதை வைத்துக் கொள்வார்கள். அதுதான் இந்த நாட்டில் அனுமதியா ? 50 இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே பாரதிய ஜனதா கட்சியினுடைய  கொடியை…. அதுவும் ஒரு மாநில தலைவர் வீட்டுக்கு முன்னால் இருந்து எடுப்பார்கள் என்றால் ? நாங்கள் திரும்பி என்ன கேட்கிறோம் என தெரிவித்தார்.