ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயதான மருத்துவர் செல்மா, ‘ரோப்லாக்ஸ்’ எனும் ஆன்லைன் கேம் விளையாடும்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது இளைஞர் முகமது அக்மலுடன் பழகியுள்ளார். பல மாதங்களாக ஆன்லைனில் பேசி வந்த இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. காதலுக்காகத் தனது நாட்டையும், வசதிகளையும் துறந்து ஜெர்மனியிலிருந்து பாகிஸ்தானின் ஒரு குக்கிராமத்திற்குப் பயணம் செய்த செல்மா, அங்கு அக்மலை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது இந்த விசித்திரமான காதல் கதை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

​திருமணத்திற்குப் பிறகு அக்மலுடன் பாகிஸ்தானிலேயே செட்டில் ஆகப் போவதாகச் செல்மா அறிவித்துள்ளார். அதற்காக அவர் தற்போது உருது மற்றும் பஞ்சாபி மொழிகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார். ஒரு டாக்டர் தனது எதிர்காலத்தை ஒரு கிராமத்து இளைஞருக்காக மாற்றிக்கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “ஆன்லைன் கேம்ல துப்பாக்கிச் சுடுறதை விட்டுட்டு, இவங்க என்னன்னா லவ் பண்ணி கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க” என்று நெட்டிசன்கள் இந்த ஜோடியைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.