இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, காண்போர் அனைவரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு நபர் கோவிலின் உள்ளே நின்று கொண்டு, இறை வழிபாட்டிற்காக மிகக் கம்பீரமாகச் சங்கு ஊதுகிறார். அந்தச் சங்குச் சத்தம் கோவில் முழுவதும் எதிரொலிக்கும் வேளையில், அவர் அருகே அமர்ந்திருக்கும் ஒரு நாய், அந்தச் சத்தத்திற்கு இணையாகத் தானும் தனது குரலை உயர்த்தி ஒருவிதமான ஒலியை எழுப்புகிறது. சங்கு ஊதுபவர் எப்போது சத்தத்தை ஏற்றுகிறாரோ, அதே பாணியில் அந்த நாயும் தனது ஒலியை மாற்றி மாற்றி எழுப்புவது, ஏதோ அந்த நாயும் சங்கு ஊதுவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.
இந்தக் காணொளியைப் பார்க்கும் நெட்டிசன்கள், “விலங்குகளுக்கும் இறை உணர்வு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி” என்று நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாகச் சங்குச் சத்தம் கேட்டால் சில விலங்குகள் மிரளும், ஆனால் இந்த நாய் அந்தச் சத்தத்தோடு ஒன்றிப்போய், தானும் ஒரு பக்தனைப் போலவே ஒலியெழுப்புவது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. “சங்கு ஊதுறதுல அந்த நாய்க்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட்டா?” என்று வியக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் அதன் ஈடுபாடு தெரிகிறது. பக்திக்கும் அன்புக்கும் மொழி தேவையில்லை, இந்த நாயின் சத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாஸ்!
