சமூக வலைதளங்கள் மூலம் உலக நாடுகளின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே பார்த்து வரும் வேளையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்துத் திரையரங்கம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, இந்த வீடியோவில் காட்டப்படும் தியேட்டர் முற்றிலும் மாறுபட்ட அதிர்ச்சியை அளிக்கிறது.

வீடியோவின் தொடக்கத்தில் ஒரு நபர் அந்த கிராமத்துத் திரையரங்கிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். பார்ப்பதற்கு ஒரு சிறிய கடை போல் காட்சியளிக்கும் அந்த இடத்திற்குள் சென்றால், அங்கு ஒரு சிறிய அறையில் சுமார் 32 இன்ச் எல்.இ.டி (LED) அல்லது எல்.சி.டி (LCD) தொலைக்காட்சிப் பெட்டி (TV) வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் பார்வையாளர்கள் அமர்வதற்காக சொகுசு நாற்காலிகளுக்குப் பதிலாக, மரத்தாலான பெஞ்சுகள்  போடப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Moolchand Parmar Vlogs (@moolchandparmar)

அந்தச் சிறிய அறையின் கூரையில் ஒரு மின்விசிறியும் பொருத்தப்பட்டுள்ளது. இங்கு படம் பார்க்க வரும் மக்களுக்கு 30 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்படுவதாகவும், மக்கள் அங்கு அமர்ந்து டீ குடித்துக்கொண்டே, அரட்டை அடித்து, அந்தச் சிறிய தொலைக்காட்சியில் திரைப்படங்களைக் கண்டு மகிழ்வதாகவும் அந்த வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது.

‘moolchandparmar’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை என்றாலும், இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் தங்களது வீடுகளில் இருக்கும் டிவியே இதைவிடப் பெரிதாக இருப்பதாகக் கிண்டல் செய்துள்ளனர், மேலும் சிலர் இச்சம்பவத்தை இந்தியாவின் நவீன வசதிகளோடு ஒப்பிட்டுப் பாகிஸ்தானின் நிலையை நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.