திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் பிரகாஷ், தனது மனைவி சுதாவுடன் கிராமத்தில் நடந்த ஒரு நாடகத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது, டீ குடிக்க பணம் கேட்ட பிரகாஷுக்கு, சுதா பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டையால் மனமுடைந்த பிரகாஷ், வீட்டுக்குத் திரும்பியதும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பெருங்கட்டூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷின் உடல், பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து, பிரகாஷின் மனைவி சுதா, மோரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஒரு சிறிய வாக்குவாதம் இப்படி ஒரு பெரும் துயரத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
