2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது முதற்கட்ட பரப்புரையை வருகிற செப்டம்பர் 13-ம் தேதி திருச்சி மரக்கடை பகுதியில் தொடங்கவுள்ளார். இந்த நிலையில், அவரது பிரசாரம் நடைபெறும் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாதென்ற காரணத்துடன், திருச்சி மாநகர காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்துள்ளது.

இந்த நிபந்தனைகளில் முக்கியமானவை:

  • விஜய் பயணம் செய்யும் வாகனத்தின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் அனுமதி இல்லை.

  • தொண்டர்கள் பைக், கார் மூலம் ஊர்வலமாக செல்லக் கூடாது.

  • வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியை தவெக நிர்வாகிகள் தாமாகவே ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • கர்ப்பிணிகள், குழந்தைகள், மூப்பர்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

  • மரக்கடையில் பிரசாரம் முடிந்ததும், வழித்தடத்தை மாற்றி அரியலூர் மாவட்டத்திற்கு செல்வதற்கான பயண திசை காட்டப்பட்டுள்ளது.