உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வழிதவறி ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அவரைத் திருடி எனத் தவறாகக் கருதிய அப்பகுதி மக்கள், அந்தப் பெண்ணின் உண்மை நிலையை அறியாமல் மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

“>

 

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்ட ஹரித்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர சிங் டோபால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பெண்ணைத் தாக்கியதாக ஒரு பெண் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
<a href=”http://

“>
“யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க உரிமையில்லை” என்று எச்சரித்துள்ள எஸ்பி சிட்டி அபய் சிங், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்துள்ளார்.