உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபருக்கு அங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

கடந்த மார்ச் 21 அன்று ஈத் பண்டிகை தினத்தன்று, டாக்டர் சல்மா நசீரின் வீட்டிற்குள் திருடும் நோக்கில் நுழைந்த அந்த அயோக்கியனைப் பார்த்ததும், அச்சப்பட்டு அலறுவதற்குப் பதிலாக அந்த வீட்டுச் சிறுமிகள் காட்டிய வீரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த நபர் தப்பிக்க முயன்ற போதிலும், விடாமல் துரத்திப் பிடித்து சிறுமிகள் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

“>

 

இந்த ‘வீரச் சிறுமிகளின்’ அதிரடிச் செயலைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மொராதாபாத் காவல்துறையினர், தப்பியோடிய அந்தச் சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.