தேர்தல் நடைபெறும் வரை தமிழக ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேலியாக பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், திமுக அரசுக்கு ஆளுநர் தான் தொடர் விளம்பரம் செய்து கொடுக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக அவர் தொடர்ந்து புருடா விட்டு வருகிறார். தமிழ்நாடு மக்கள் ஆளுநர் ரவியை பொருட்படுத்தவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.