தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று முதலமைச்சர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்த குடியரசுத் தலைவர் இன்றைக்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பும் வழியில் முதலமைச்சர் வழி அனுப்ப சென்னை விமான நிலையம் சென்றிருந்தார்.

இந்த நிலையில் இந்த கோரிக்கை என்பது வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரண்டு சட்ட மசோதாக்கள் நிரூபிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. இதற்கான ஒப்புதலை இந்திய குடியரசுத் தலைவர் விரைந்து வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஏனென்றால் கவர்னர் ஒப்புதல் கொடுத்து தற்போது குடியரசுத் தலைவரிடம் அந்த கோப்புகள் இருக்கின்றன.

அந்த அடிப்படையில் இந்த கோரிக்கை என்பது வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் 50 லட்சம் மாணவ – மாணவியரிடம் கையெழுத்து இயக்கம் பெறக்கூடிய முயற்சிகள் நடைபெற்ற நிலையில் இது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து திமுக எம்பிக்கள் மனு கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் சென்னை வந்திருந்த குடியரசுத் தலைவரிடமும் இது தொடர்பான மனுவினை முதலமைச்சர் இன்று வழங்கியிருக்கிறார்.