ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள காஞ்சிபுர் பகுதியில் வசிக்கும் ஒரு நபர், தன்னைக் கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு நேராக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பாம்பு கடித்த நேரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்ட இந்த நபரின் ஞானமும் துணிச்சலும் அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.

தன்னை கடித்த பாம்பை பதற்றமின்றி ஒருபக்கம் பையில் வைத்து, மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவர்களிடம், “இதுதான் என்னை கடித்த பாம்பு, தயவுசெய்து சீக்கிரம் சிகிச்சை செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார். இந்த அபூர்வமான காட்சி அருகிலிருந்தவர்கள் எடுத்த வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மருத்துவர்கள் உடனடியாக அந்த நபருக்கு எதிர்விஷம் மருந்து (anti-venom) செலுத்தி சிகிச்சை அளித்தனர். அவருடைய தைரியம் மற்றும் நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தது காரணமாக, அவரது உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு கடித்து இருந்தால் பதற்றத்துடன் உணர்விழந்து விழும் நிலை இருக்கும்போது, அந்நபர் காட்டிய உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் பலருக்கும் உதாரணமாக திகழ்கிறது. தற்போது அந்த நபர் முழுமையாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதோ அந்த வீடியோ,