ஆதிபுரூஸ் படத்தின் பத்தாயிரம் டிக்கெட்டுகளை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக The Kashmir files பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தெலுங்கானா முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு தெய்வீக சினிமா அனுபவத்தை அளிக்க உள்ளேன். பிரபாஸ் நடித்துள்ள 3d திரைப்படமான ஆதிபுரூஸ் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு இலவசமாக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.