இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் சேர்ந்து தோனி என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது எல்ஜிஎம் படத்தின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவை தோனியும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.