தமிழர்களின் ஃபேவரட் சீரியல்களான மர்ம தேசம் மற்றும் விடாது கருப்பு ஆகியவற்ற இயக்கிய நாகாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனந்தபுரத்து வீடு படத்தையும் இயக்கியது இவர்தான். இப்படி மர்மமான பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு வெப் சீரிசை இயக்கி வருகிறார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.