ஆங்கிரி ரான்ட்மேன் என்ற பெயரில் அறியப்படும் பிரபல யூட்யூபர் அப்ரதீப் சா(27) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு இயக்குனர் ஜெயம் மோகன் ராஜா, தமன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.