தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் அடுத்ததாக சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமாருடன் புதிய படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் சீசர் நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு வீர தீர சூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் முதல் பாகம் அடுத்ததாக வெளியாகும் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்திற்கு வீர தீர சூரன் என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விக்ரமின் படத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சர்ச்சைகள் எழுவதற்கு  வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.