தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார். இதேபோன்று விசுவாசம் படத்திலும் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து அனிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவருக்கு தற்போது 19 வயது ஆகும் நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் அனிகா தற்போது நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அஜித்தின் ரீல்மகளா இது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.