விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் முன்னோடிகள், கட்சி கொடி விளக்கம் என அனைத்தையும் விளக்கமாக பேசினார். அது மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளையும் நேரடியாக விமர்சனம் செய்தார். விஜய்யின் பேச்சை கேட்டு அவரது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையில் ஆக்கபூர்வமான புதுமையான நிலைப்பாடுகளோ, செயல் திட்டங்களோ, புரட்சிகர முன்மொழிவுகளோ எதுவும் இல்லை. பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்து விட்டார்களோ என தோன்றுகிறது.
