ஓசூரில் தனியார் பள்ளி மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள், பாகலூர் சாலையில் உள்ள யோகி வேமண்ணா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு கடந்த 21 மற்றும் 23 தேதிகளில் நடந்துள்ளது.
வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகள் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தும்விதமாக சிறப்பாக விளையாடினர். இந்த நிலையில் போட்டியின் போது ஜான் பாஸ்கோ பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் கருப்பையா, பயிற்சியாளர் தியாகராஜன் ஆகியோர் ஒரு மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
