விசேஷ வீடுகளில் அல்வா சாப்பிடுவது வழக்கம்தான், ஆனால் அந்த அல்வாவையே உடைக்க உளி பிடிப்பது இதுவே முதல்முறை.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய இரும்புக் கடாயில் டன் கணக்கில் அல்வா கிண்டப்பட்டுள்ளது. விசேஷத்திற்கு வந்தவர்கள் அல்வாவை எடுக்க முயன்றபோது, அது துளியும் அசையவில்லை. கரண்டி, ஜல்லிக்கரண்டி என எதைப் போட்டும் உடைக்க முடியாத அளவுக்கு அந்த அல்வா கல்லை விடக் கடினமாக மாறியுள்ளது.
गाँव से सामने आए इस अनोखे मामले ने सोशल मीडिया पर जबरदस्त हलचल मचा दी है।
बताया जा रहा है कि एक हलवाई ने गाँव में बेहद बड़ी कढ़ाही में हलवा बनाया और फिर अचानक गायब हो गया।
जब गाँव वाले हलवा निकालने पहुँचे तो नज़ारा देख सब हैरान रह गए।
कढ़ाही में रखा हलवा इतना जम चुका था कि वह… pic.twitter.com/20YocoDK3u— Renu Yadav (@renuy305) January 21, 2026
கடைசியில் வேறு வழியின்றி, ஊர் மக்கள் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தும் உளி மற்றும் சுத்தியலைக் கொண்டு வந்து அல்வாவை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
“இது அல்வாவா? இல்லை சிமெண்ட் போட்டு செய்யப்பட்ட பாறையா?” என மக்கள் தலையிலடித்துக் கொள்கின்றனர். இதற்கிடையே, அல்வா இப்படி ஆனதை அறிந்த சமையல்காரர், ஊர் மக்களிடம் வசமாக மாட்டிக்கொள்வோம் என பயந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது அந்தச் சமையல்காரரை ஊரே தேடி வருகிறது.
