தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார வாரியம் தொடர்பாக மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
நாளை (ஜூன் 25) வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ “வெள்ளை அறிக்கையை” அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடியாக வெளியிடவுள்ளார். சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் (TNEB Headquarters) வைத்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடும் மெகா நிகழ்வு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த அறிக்கையில் மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை என்ன, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் நிதிப் பயன்பாடுகள் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பது குறித்த அக்குவேறு ஆணிவேறான அத்தனை விபரங்களும் ஆதாரங்களுடன் வெளியாகவுள்ளன.
மின்சார வாரியத்தின் இமாலயக் கடன் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துத் தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் முந்தைய திமுக அரசின் மீது ஏதேனும் அதிரடிப் புகார்களைக் கிளப்பப் போகிறதா? என்ற எதிர்பார்ப்பு தற்போது சோசியல் மீடியாவில் தொண்டர்களிடையே விவாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்து, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
