மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநரான கேதன் அகர்வால் (26) என்ற வாலிபர், வரலாற்றுச் சிறப்புமிக்க லோகட் கோட்டையின் 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல அது அவரது வருங்கால மனைவி சியா கோயல் திட்டமிட்டு அரங்கேற்றிய கொடூரக் கொலை என்பது ஊரகக் காவல் துறையின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தான் உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம் நடக்கவிருந்த நிலையில்,சியாவுக்கு சேதன் சௌத்ரி என்ற மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது; இதற்குத் தடையாக இருந்த கேதனை உல்லாசப் பயணம் என்று லோகட் கோட்டைக்கு வரவழைத்து, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பின்னாலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க, “பலத்த காற்றால் கேதன் வழுக்கி விழுந்துவிட்டார்” எனப் போலீசில் நாடகமாடியதுடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகி உருகி இரங்கல் ஸ்டோரி பதிவிட்டுப் பரிதாபம் தேடியுள்ளார்.
கேதனின் தந்தை விஷால் அகர்வால் அளித்த புகாரின் பேரில், சியாவின் இன்ஸ்டாபதிவு மற்றும் மொபைல் ஆதாரங்களை வைத்துத் துப்புத் துலக்கிய போலீஸார், தற்பொழுது சியா மற்றும் அவரது கள்ளக்காதலன் சேத்தன் இருவரையும் கொலை மற்றும் குற்றச் சதித் திட்ட வழக்குகளின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்
