காட்டில் ராஜா புலி என்றால், தண்ணீரில் ராஜா முதலை. ஆனால், பசித்த புலிக்கு முன்னால் எந்த ராஜாவும் எடுபடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி.

ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் (Ranthambore) தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் ஒரு பெரிய முதலை ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by @official_ranthra

அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு புலி, முதலையைத் தனது மதிய உணவாக்கத் திட்டமிட்டது. சத்தமே இல்லாமல் பதுங்கி வந்த புலி, மின்னல் வேகத்தில் முதலையின் மீது பாயத் தொடங்கியது.

புலியின் வருகையை கடைசி நொடியில் கவனித்த அந்த ‘தண்ணீர் அரக்கன்’ பதறிப்போய், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றுக்குள் ஒரே குதி! புலியின் நகங்களில் சிக்காமல் நூலிழையில் முதலை தப்பித்து தண்ணீருக்குள் மறைந்தது.

புலியும் ஆழமான தண்ணீருக்குள் செல்லத் துணியாமல் கரையில் நின்றபடியே வேடிக்கை பார்த்தது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து வியந்துள்ளனர்.