அமெரிக்காவில் வாழும் இந்தியத் தம்பதியினர் தங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனை கொடுத்த பில்லைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் காட்டிய மருத்துவமனை பில்லின் மொத்தத் தொகை 55.2K அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 79 லட்ச ரூபாய்! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பையே ஒரு பிரசவத்திற்காகச் செலவிட வேண்டிய நிலை இருப்பதை அந்தத் தம்பதியினர் வேதனையுடனும் வியப்புடனும் பகிர்ந்துள்ளனர். “அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வெறும் உணர்வுப்பூர்வமான விஷயம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய நிதி சவாலும் கூட” என்பதை இந்த வீடியோ அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அமெரிக்காவின் மருத்துவக் காப்பீடு (Insurance) முறையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்சூரன்ஸ் இருந்தால் இந்தத் தொகையில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும் என்றாலும், அடிப்படை பில்லே இவ்வளவு கோடிகளில் வருவது நடுத்தர மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “நம்ம ஊரு அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் கிளினிக்குகளிலும் நடக்கும் பிரசவச் செலவுகளை ஒப்பிடும்போது, இது நிஜமாவே ஒரு பகீர் ரகம் தான் பாஸ்” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பணக்காரர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம், ஆனால் சராசரி மனிதர்களுக்கு இது எட்டாக்கனி தான்
