சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு லாரியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம், வாகன ஓட்டிகளை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக லாரிகளின் பின்னால் “Horn Please” அல்லது “Sound Horn” என்றுதான் எழுதிப் பார்த்திருப்போம். ஆனால், இந்த லாரி உரிமையாளர் ஒரு படி மேலே போய், தேவையில்லாமல் ஹார்ன் அடித்து நச்சரிப்பவர்களைத் தடுக்க ஒரு நூதனமான ஆங்கில வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதில், “ONE HORN = ONE DAD, MORE HORN = MORE DAD… YOU..?” என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, “ஒரு முறை ஹார்ன் அடித்தால் ஒரு தந்தை, பலமுறை (தேவையில்லாமல்) அடித்தால் பல தந்தை… நீங்கள் எப்படி?” என்கிற தொனியில் அந்த வாசகம் அமைக்கப்பட்டிருந்தது.
லாரியைப் பின் தொடர்ந்து வந்தவர்கள், இந்த விசித்திரமான மற்றும் நையாண்டி கலந்த எச்சரிக்கையைப் பார்த்து வியந்து அதைக் வீடியோவாக எடுத்துப் பகிர, அது இப்போது இன்ஸ்டாகிராமில் ‘தெறி’ வைரலாகி வருகிறது. சாலையில் தேவையற்ற ஒலி மாசு (Noise Pollution) ஏற்படுத்துபவர்களை நோக்கி, ஒருவிதமான ‘சைக்காலஜிக்கல்’ அட்டாக் கொடுத்துள்ளார் அந்த டிரைவர். “இது கொஞ்சம் ஓவர் தான்” என்று சிலர் கமெண்ட் செய்தாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் “ஹார்ன் அடிச்சு நச்சரிக்குறவங்களுக்கு இது சரியான பதிலடி தான் பாஸ்” என்று அந்த டிரைவரின் ஐடியாவைப் பாராட்டி வருகின்றனர். இனி அந்த லாரிக்கு பின்னாடி வர்றவங்க ஹார்ன் அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிப்பாங்கங்கிறது மட்டும் உறுதி
