சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி காண்போர் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. அதில், காவல்துறையினர் சிலர் தங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட உணவுப் பொட்டலங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது அங்கே நின்றிருந்த ஒரு ஏழை மூதாட்டி, தனக்கும் பசிக்கு ஏதேனும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கையை நீட்டுகிறார். ஆனால், அங்கிருந்தவர்கள் தங்களுக்குள்ளும், சக காவலர்களுக்கும் உணவைப் பிரித்துக் கொடுத்தார்களே தவிர, நீண்ட நேரமாகக் கையை நீட்டிக் கொண்டு பசியோடு காத்திருந்த அந்த மூதாட்டியைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. அந்த மூதாட்டி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி கையை நீட்டியும், எவருமே அவருக்கு ஒரு பொட்டலம் உணவைக் கூட வழங்கவில்லை.
The tragic truth of aur society 🥺 pic.twitter.com/94lgZ6dxGV
— Baba X Wale (@Babaxwale) January 23, 2026
இந்த வேதனையான காட்சி எக்ஸ் (X) வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது. “சட்டம் காக்கும் காவலர்களுக்குச் சக மனிதனின் பசி தெரியவில்லையா?” என்றும், “அங்கிருந்த உணவில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்திருந்தால் அந்தப் பாட்டியின் வயிறும் மனதும் எவ்வளவு குளிர்ந்திருக்கும்” என்றும் நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விவாதித்து வருகின்றனர். பசியால் கையேந்தும் ஒரு முதியவரை அலட்சியப்படுத்தும் இந்தச் செயல், சமூகத்தில் இன்னும் மனிதநேயம் எவ்வளவு தூரம் தள்ளிப்போயிருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. அந்த மூதாட்டியின் ஏமாற்றமான முகம் பார்ப்பவர் எவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.
